உள்ளூர் செய்திகள்

சொத்து வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-18 10:03 GMT   |   Update On 2022-08-18 10:03 GMT
100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மோசமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

கோவை, ஆக.18-

கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சியில் 60 சதவீத சொத்துவரி உயர்வை கைவிட வேண்டும், இதர உயர்த்தப்பட்ட வரிகள், கட்டணங்களை குறைக்க வேண்டும், மோசமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். தனியார் நிறுவனத்திற்கு விடப்பட்ட குடிநீர் வினியோக உரிமையை ரத்து செய்ய வேண்டும், பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News