உள்ளூர் செய்திகள்

மாவிளக்கு எடுத்து பெண்கள் ஊர்வலகமாக வந்த காட்சி.

மாரியம்மன் கோவில் திருவிழா: 600 பெண்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊர்வலம்

Published On 2022-08-11 15:23 IST   |   Update On 2022-08-11 15:23:00 IST
  • பம்பை மேளதாளங்கள் முழங்க திருவிழா கொண்டாடப்பட்டது.
  • பக்தர்கள் கரகம் எடுத்தும், அம்மன் வேடமிட்டும் ஊர்வலமாக வந்தனர்.

தருமபுரி,

தருமபுரி அருகே உள்ள கடகத்தூர் பகுதி சக்தி மாரியம்மன் திருவிழா கடந்த திங்கட்கிழமை பட்டாளம்மனுக்கு பொங்கல் வைத்து கங்கை பூஜை செய்த பின்னர் சாமி திருவீதி உலாவுடன் தொடங்கியது.

9-ம் தேதி 2-ம் நாள் திருவிழாவாக கூழ் ஊற்றுதல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று பட்டாளம்மனுக்கு தேர் வீதி உலாவில், 600-பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

இந்த ஊர்வலத்தின் போது, மயிலாட்டம், கரகாட்டம், கட்டக்கால், பொய்க்கால் குதிரை, பம்பை மேளதாளங்கள் முழங்க திருவிழா கொண்டாடப்பட்டது.

பக்தர்கள் கரகம் எடுத்தும், அம்மன் வேடமிட்டும் ஊர்வலமாக வந்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News