உள்ளூர் செய்திகள்

மார்க்க சகாய ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-01-27 15:22 IST   |   Update On 2023-01-27 15:22:00 IST
  • ஜீர்னோத்தராண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது
  • மருந்து சாற்றி திருமேனிகளை அமர்த்துதல் உள்ளிட்டவை நடைபெற்றது.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பி.எஸ். அக்ரஹாரம் கிராமத்தில் அமைந்துள்ள மரகதாம்பிகை சமேத மார்க்க சகாய ஈஸ்வரர் திருக்கோவில் பெருஞ்சாந்தி திருக்குட நன்னீராட்டு பெருவிழா எனும் ஜீர்னோத்தராண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் இன்று க நடைபெற்றது.

முன்னதாக தை மாதம் நான்காம் நாள் யாகசாலை முகூர்த்த கால் நடுதல் வீட்டில் முளைபாலிகை இடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தை மாதம் 11-ம் நாள் மூத்த விநாயகர் பூஜை, திரு அருள் ஆணை பெறுதல், நிலத்தேவர் வழிபாடு, விநாயகர் கேள்வி, திருமகள் வழிபாடு உள்ளிட்டவை நடைபெற்றன. நேற்று விநாயகர் வழிபாடு மூன்றாம் கால வேள்வி, நிறைவேள்வி வழிபாடு, திருமுறை நாத சாலை இசையால் இறைவனை மகிழ்வித்தல் மருந்து சாற்றி திருமேனிகளை அமர்த்துதல் உள்ளிட்டவை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று காலை விநாயகர் வழிபாடு, நாடி சந்தனம், திருவருள் சக்தியை வேள்வியில் இருந்து இறை திருமேனிக்கு அளித்தல், நிறைவேள்வி நடைபெற்று மரகதாம்பிகை சமேத மார்க்க சகாய ஈஸ்வரர் மற்றும் நால்வர் பெருமக்கள் நவகிரகம் மற்றும் விமான கோபுர பரிவார தெய்வங்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரானது தெளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் காத்திருந்த பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகள் மற்றும் கும்பாபிஷேக நிகழ்வுகள், அன்னதானம் உள்ளிட்ட ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News