உள்ளூர் செய்திகள்

முது குறிக்கி கிராமத்தில் மஞ்சுவிரட்டும் விழா

Published On 2023-03-02 15:23 IST   |   Update On 2023-03-02 15:23:00 IST
  • எருதுகளை மாடு பிடி வீரர்கள் துரத்திச் சென்று அடக்கி எருதுகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுகளை மாடுபிடி வீரர்கள் எருதுகளை பிடித்து அடக்கி பரிசுகளை அள்ளி சென்றனர்.
  • சுமார் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு விழாவினை கண்டு களித்தனர்.

கிருஷ்ணகிரி,

தமிழர்களின் பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் எருது ஜல்லிகட்டு, எருது ஓட்டம், எருதுவிடும் போட்டி, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பல்வேறு எருதுவிடும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில்கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள முது குறிக்கி கிராமத்தில் நடைப்பெற்ற இந்த மஞ்சு விரட்டும்போட்டியை துவக்கிவைக்க வருகை தந்த கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமாருக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுநாத் தலைமையில் கிராம மக்கள் சிறப்பானவர வேரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து துவங்கிய மாபெரும் மஞ்சுவிரட்டும் போட்டியை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக் குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த மஞ்சு விரட்டும் போட்டியில் கிருஷ்ணகிரி, ஓசூர், பேரிகை, பாகலூர், வேப்ப னஹள்ளி தர்மபுரி மட்டுமின்றி மற்றும் ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு இடங்களில் இருந்து 600-க்கு மேற்பட்ட எருதுகள் கலந்துக் கொண்டன.

முன்னதாக இப்போட்டி யில் கலந்து கொண்ட எருதுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனைகள் செய்யப்பட்டது, இதனைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வெரு எருதுகளாக விடப்பட்டது.

விழாவில் கலத்துக் கொண்ட எருதுகளுக்கு அலங்கரிக்கப்பட்ட கொம்புகளில் ரொக்க பரிசுகள் அடங்கிய தட்டிகள் கட்டப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் சீறிப்பாய்ந்து ஓடிய

எருதுகளை மாடு பிடி வீரர்கள் துரத்திச் சென்று அடக்கி எருததுகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுகளை சுமார் 200 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் எருதுகளை பிடித்து அடக்கி பரிசுகளை அள்ளி சென்றனர்.

இந்த எருது விடும் விழாவை காண கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா எல்லைைப்பகுதிகளில் இருந்து சுமார் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு விழாவினை கண்டு களித்தனர்.

இந்த விழாவின்போது காங்கிரஸ் மாட்டத் துணைத்தலைவர் சேகர், மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, எருது விடும் சங்கத்தின் தலைவர் இராமமூர்த்தி,மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ஹரிஸ், வட்டாரத் துணைத்தலைவர் பாண்டியன, ஊராட்சி மன்றத் தலைவர் சக்கராப்பா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்கள்..

Tags:    

Similar News