உள்ளூர் செய்திகள்

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை: சென்னை புறநகரில் 6 இடங்களில் தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-29 14:28 IST   |   Update On 2023-07-29 14:28:00 IST
  • ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பாரதிய ஜனதா அரசுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர்.
  • பல்லாவரம், தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட ஒவ்வொரு ஊர்களிலும் திமுக பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

சென்னை:

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பாரதிய ஜனதா ஆட்சியை கண்டித்தும் சென்னை புறநகரில் காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் 6 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெற்றன.

ஆலந்தூர் பல்லாவரம் தாம்பரம் செங்கல்பட்டு திருப்போரூர் குன்றத்தூர் ஆகிய இடங்களில் மகளிர் அணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பாரதிய ஜனதா அரசுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர்.

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி நங்கநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதேபோல் பல்லாவரம், தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட ஒவ்வொரு ஊர்களிலும் திமுக பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

Tags:    

Similar News