உள்ளூர் செய்திகள்

மணிப்பூர் கலவரம்: மத்திய, மாநில அரசை கண்டித்து கிறிஸ்தவர்கள் பொதுக்கூட்டம்

Published On 2023-07-17 19:15 IST   |   Update On 2023-07-17 19:15:00 IST
  • கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடப்பதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
  • பொன்னேரி அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்னேரி:

மணிப்பூர் மாநிலத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள், வீடுகள், பள்ளிகள், அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டதை கண்டித்து பொன்னேரி போதகர்கள் ஐக்கிய நல சங்கம் அனைத்திந்திய கிறிஸ்தவர்கள் சபை கூட்டமைப்பு சார்பில் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடப்பதை கண்டித்தும், மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும், 200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் முழங்காலில் நின்றபடி பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதில் பிஷப் பாஸ்டர் ஞான்ராஜ், ஏஐசிசிசி தலைவர் பிஷப் பாஸ்டர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமையில் பாஸ்டர்கள் ஜெயா, ஜான்ராஜ், அமுல்ராஜ், சிவா செல்வராஜ், ஜான் பாபு, லாசர் சலோமி டேனியல், ஜான்சன் போதகர்கள், விக்டர் டேனியல், தாமஸ், ஏசாயா, பிஷப்கள் ஜெரால்டு, டைடன், நாதன் மோசஸ், பால் ஞானம், பக்தர் சுந்தர் சிங் மற்றும் வழக்கறிஞர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News