உள்ளூர் செய்திகள்

குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் கட்டுவதற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார். அருகில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளனர்.


தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் - கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்

Published On 2023-01-22 07:13 GMT   |   Update On 2023-01-22 07:13 GMT
  • தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர். பூங்காவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
  • முதல்-அமைச்சர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகர தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்துக்கு ரூ. 77.87 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் மறைந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்துக்கு அரசின் சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர். பூங்காவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசியாதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகர தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்துக்கு ரூ. 77.87 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர் பூங்காவிற்கு கீழ்ப்புறம் 376 சதுர அடி பரப்பில் முழு உருவச்சிலையுடன் கூடிய மண்டபமும், மண்டபத்தை சுற்றியுள்ள பகுதியில் பேவர் பிளாக், புல்வெளி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவுள்ளது என்றார்.

இதில், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, கமிஷனர் சாருஸ்ரீ, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகர துணை செயலாளர் கீதா முருகேசன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிர்மல் ராஜ், சுரேஷ் குமார், மாநகர தொண்டர் அமைப்பாளர் முருக இசக்கி, வட்ட செயலாளர்கள் ரவிந்திரன், கீதா மாரியப்பன், கந்தன், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், குரூஸ் பர்னாந்து நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன்ஹில்ட், பரதர் நலசங்க தலைவர் ரொனால்ட் வில்லவராயர், சமூக ஆர்வலர் பாத்திமா பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News