உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் மங்குஸ்தான் பழங்கள் அமோக விற்பனை

Published On 2023-06-10 14:36 IST   |   Update On 2023-06-10 14:36:00 IST
  • மங்குஸ்தான் பழம் மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும்.
  • தென்னிந்தியாவில் மலைப்பகுதிகளில் தோட்ட பயிராக மங்குஸ்தான் பழத்தை வளர்க்கின்றனர்.

ட்டி,

மலை மாவட்டமான நீலகிரியில் தற்போது பரவலாக மங்குஸ்தான் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் மங்குஸ்தான் பழங்கள் மார்கெட் கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது சாலையோர கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளில் விற்கும் அளவிற்கு மக்களின் விருப்பத்திற்குரிய பழமாக மாறி உள்ளது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். மங்குஸ்தான் பழத்தில் எண்ணற்ற சத்துகள் உள்ளன.

பொதுவாக மலைவாசஸ்தலங்களில் விளையும் பழம் மங்குஸ்தான். இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப் பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். தோல் பகுதியை பிளந்தால் 3 அல்லது 4 சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையும் பழமாகவும், அதிக மக்களால் விரும்பி சாப்பி டப்படும் ஒரு பழமாகவும் மங்குஸ்தான் பழம் இருக்கிறது. இப்ப ழத்தின் தாயகம் மலேசியா ஆகும்.

ஆரம்பகாலத்தில் தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகம் பயிரிடப்பட்டு வந்தன. தற்போது மங்குஸ்தான் இந்தியாவிலும் பயிரிடப்பட்டு வருகின்றது.

பல்வேறு நன்மைகள்

இப்பழம் மிகவும் சுவையுடன் கூடிய ஆரோக்கியம் நிறைந்ததாகவும் பல்வேறு நன்மைகளை அளிப்பதாகவும் உள்ளது. அதிகமான வெப்ப காலங்களில் உடலில் ஏற்படும் அதிக தாகம், அதிக வெப்பம் போன்ற வற்றை தீர்க்கிறது. இந்த பழங்கள் ஊட்டியில் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் குவித்து வைத்து விற்கபடுகின்றன. பலர் சுவைக்காகவும் பலர் இதன் பயன்கள் அறிந்தும் வாங்கி செல்கின்றனர்.

Tags:    

Similar News