உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
சின்னமனூர் அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயன்றவர் கைது
- தேனி செல்லும் பிரதான சாலையில் தனியார் ஏ.டி.எம் எந்திரத்தை தனிநபர் ஒருவர் தேங்காய் உரிக்கும் இரும்பு கம்பியால் உடைத்துக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடமலைக்குண்டு ரங்கநாதபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் தேனி செல்லும் பிரதான சாலையில் தனியார் ஏ.டி.எம் எந்திரம் உள்ளது. இந்த மையத்தில் உள்ள எந்திரத்தை தனிநபர் ஒருவர் தேங்காய் உரிக்கும் இரும்பு கம்பியால் உடைத்துக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடமலைக்குண்டு ரங்கநாதபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராஜீவ் மகன் பாண்டியனை (52) பிடித்து விசாரணை செய்தனர். அவர் தேங்காய் உரிக்கும் வேலைக்கு சென்று வருகிறார்.
ஆனால் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்க முயற்சி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.