உள்ளூர் செய்திகள்
அனுமதியின்றி கற்களை வெட்டி கடத்தியவர் கைது
- மத்தூர் பகுதியில் மண்டல துணை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
- அதிகாரிகள் டிரைவரையும், டிப்பர் லாரியையும் மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் மண்டல துணை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில் மத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த டிரைவர் சக்திவேல் (வயது45) என்பவர் டிப்பர் லாரியில் அனுமதியின்றி 2 யூனிட் கற்களை வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் டிரைவரையும், டிப்பர் லாரியையும் மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் சக்திவேலை கைது செய்தனர். கடத்தப்பட்ட 2 யூனிட் கற்களையும், டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.