உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் மீனவர்கள் வலையில் திருக்கை குஞ்சு மீன்கள்: விலையில்லாததால் வருவாய் குறைவு
- ஆழ்கடல் மீன்கள், சிறு நண்டுகள் தற்போது காலநிலை மாற்றம், கடல் சீற்றம் காரணமாக கரையோரம் சிக்குகிறது.
- பாறை, வஞ்சரம், இறால், மத்தி மீன்கள் போன்று அதிக விலைக்கு போகவில்லை.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் நாட்டு படகுகளில் கடலுக்கு சென்று கரையோரம் மீன்பிடிக்கும் மீனவர்கள் வலைகளில் தொடர்ந்து, ஆழ்கடலில் கானப்படும் திருக்கை மீன்களின், குஞ்சு மீன்கள், நாக்கு மீன்கள் மட்டுமே சிக்குகிறது, இவற்றுடன் நண்டும் பிடிபடுகிறது. இவ்வகை ஆழ்கடல் மீன்கள், சிறு நண்டுகள் தற்போது காலநிலை மாற்றம், கடல் சீற்றம் காரணமாக கரையோரம் சிக்குகிறது.
ஆனால் பாறை, வஞ்சரம், இறால், மத்தி மீன்கள் போன்று இந்த மீன்கள் அதிக விலைக்கு போகாததால், குறைந்த விலைக்கு கொடுக்கின்றனர். இதனால் போதிய வருவாய் கிடைப்பதில்லை என்று அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.