உள்ளூர் செய்திகள்
- ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடைப்பதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல்
- போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை
சேலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரி ரெயில் நிலை யத்திற்கும் ஓமலூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடைப்பதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் புளூ, மெருன் கலர் டீ சர்ட் மற்றும் பச்சை கலர் சட்டை, காபி ,சிவப்பு கலர் கலந்த கட்டம் போட்ட லுங்கியும் அணிந்தி ருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்த வர்? என்பது குறித்து ஒரு விசாரித்து வருகின்றனர். அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாரும் கொலை செய்து தண்ட வாளத்தில் வீசி சென்றவரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.