உள்ளூர் செய்திகள்
திருவெண்ணைநல்லூர் அருகே விவசாய கிணற்றில் ஆண் பிணம்
- உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் அருகே தொட்டி பகுதியில் விவசாயி ஒருவரது கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது
- இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் அருகே தொட்டி பகுதியில் விவசாயி ஒருவரது கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் பாதுகாப்பு மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறந்த நிலையில் மிகுந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.