உள்ளூர் செய்திகள்

வாரத்தில் 2 நாட்கள் பொருட்கள் வழங்குவதை சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கித் தலைவர் அறவாழி தொடங்கி வைத்தார்.

மாலைமலர் செய்தி எதிரொலி; பட்டான்டிவிளை பகுதிநேர ரேஷன்கடையில் வாரம் 2 நாட்கள் பொருட்கள் விநியோகம்-அமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி

Published On 2022-09-22 06:59 GMT   |   Update On 2022-09-22 06:59 GMT
  • சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட பட்டான்டிவிளை கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடையில் வாரம் ஒரு நாள் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.
  • கூடுதலாக மேலும் ஒருநாள் பொருட்கள் வழங்க வேண்டும் என அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனர்

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட பட்டான்டிவிளை கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடையில் வாரம் ஒரு நாள் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

மாலைமலரில் செய்தி

இந்நிலையில் கூடுதலாக மேலும் ஒருநாள் பொருட்கள் வழங்க வேண்டும் என அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனர். இது தொடர்பாக கடந்த 9-ந்தேதி மாலை மலரில் செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வாரத்தில் 2 நாட்கள் ரேசன் பொருட்கள் வழங்க பரிந்துரை செய்தார். அதன்படி தற்போது செவ்வாய், வியாழன் என வாரத்தில் 2 நாட்கள் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அமைச்சருக்கு நன்றி

இதனை சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கித் தலைவர் அறவாழி பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பட்டான்டிவிளை தி.மு.க. கிளை செயலாளர் தளபதி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தங்கள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக பட்டான்டிவிளை ஊர் பொதுமக்கள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News