உள்ளூர் செய்திகள்

மதுரை-புனலூர் ரெயில் நெல்லை வரை மட்டுமே இயக்கம்

Published On 2022-06-17 09:49 GMT   |   Update On 2022-06-17 09:49 GMT
  • திருவனந்தபுரம் நேமம் - நெய்யாற்றின்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • நாளை மாலை 5.20 மணிக்கு புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய ரெயில் நெல்லையில் இருந்து புறப்பட்டு மதுரை வரை இயக்கப்படும்.

நெல்லை:

திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள நேமம் - நெய்யாற்றின் கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக மதுரையில் இருந்து இன்று நள்ளிரவு 11.25 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை -புனலூர் விரைவு ரெயில் (16729) நெல்லை -புனலூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் நெல்லை வரை மட்டுமே இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

இதேபோல் நாளை மாலை 5.20 மணிக்கு புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் - மதுரை விரைவு ரெயில் (16730) நெல்லையில் இருந்து புறப்பட்டு மதுரை வரை இயக்கப்படும் என தென்னக ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News