உள்ளூர் செய்திகள்

யோகா பயிற்சி மையம் சூறை

Published On 2022-08-09 15:04 IST   |   Update On 2022-08-09 15:04:00 IST
  • மதுரை மாநகராட்சி எக்கோ பார்க்கில் உள்ள யோகா பயிற்சி மையம் சூறையாக்கப்பட்டது.
  • தினமும் 100-க்கும் மேற்பட்டோர் இலவசமாக யோகா பயிற்சி பெற்று வருகின்றனர்.

மதுரை

மதுரை பா.ஜனதா பொருளாதார பிரிவு தலைவர் முத்துக்குமார் தலைமையில் வக்கீல்கள் மனோகரன், அமிர்தராஜ், அர்ச்சனாதேவி, காயத்ரி, சமூக ஆர்வலர் அனுஅப்சரா ஆகியோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பிரதமரின் வேண்டு கோளுக்கு இணங்க மதுரை மாநகராட்சி எக்கோ பார்க்கில் "யோகா பயிற்சி மையம்" அமைக்கப்பட்டது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் இலவசமாக யோகா பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே சமூக விரோதிகள் யோகா பயிற்சி மையத்திற்குள் அத்துமீறி புகுந்து சூறையாடி விட்டு தப்பி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், இது குறித்த நடவடிக்கைக்காக மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Tags:    

Similar News