உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகளை மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் வழங்கினார்.

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-12-08 08:33 GMT   |   Update On 2022-12-08 08:33 GMT
  • ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் வழங்கினார்.
  • இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விமல், தென்பழஞ்சி சுரேஷ், பெருங்குடி வசந்த் முன்னிலை வகித்தனர்.

திருப்பரங்குன்றம்

மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் சார்பில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுறுத்தலின்படி திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன் தலைமை தாங்கினார். இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விமல், தென்பழஞ்சி சுரேஷ், பெருங்குடி வசந்த் முன்னிலை வகித்தனர்.

வட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழைகளுக்கு தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம், சலவைப் பெட்டி ஆகியவற்றை வழங்கினார்.

இதில் மாவட்ட கவுன்சிலர் புவனேசுவரி ராஜசேகர், அரசு வழக்கறிஞர் சிவராஜா நீதி மன்னன், ஏசு சாமுவேல், இளைஞர் அணி சாரதி, அவனியாபுரம் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News