உள்ளூர் செய்திகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பி

மின்கம்பியால் டவுன்பஸ் நிறுத்தம்

Published On 2022-07-31 08:02 GMT   |   Update On 2022-07-31 08:02 GMT
  • திருமங்கலம் அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பியால் டவுன்பஸ் நிறுத்தப்பட்டது.
  • பள்ளி, கல்லூரி மாணவர்கள், கிராமமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா–விற்குட்பட்டது நேசனேரி கிராமம். சுமார் 400 வீடுகள் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு மதுரையில் இருந்து சிவரக்கோட்டை செல்லும்டவுன்பஸ் தினசரி 5 முறை வந்து செல்கிறது.

இந்த பஸ் மூலமாக செங்கப்படை மற்றும் திருமங்கலம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சென்று மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கிராமமக்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் இந்த பஸ்சை நம்பித்தான் உள்ளனர்.

நேசனேரி-செங்கப்படை ரோட்டில் அமைந்துள்ள மின்கம்பிகள் திடீரென உயரம்குறைந்து தாழ்வனது. இதனால் மின்கம்பிகள் பஸ்சில் உரசத் தொடங்கின. மழைக்கு மின்கம்பம் பூமிக்குள் இறங்கியதால் மின்கம்பிகள் தாழ்வானது.

இதனால் மதுரையில் இருந்து சிவரக்கோட்டைக்கு சென்ற டவுன் பஸ்கள் நேசநேரி கிராமத்திற்குள் வரவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள், கிராமமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

இதனை தொடர்ந்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர். தாழ்வான மின்கம்பிகளை மின்வாரியத்தில் கூறி உடனடியாக சீர்படுத்தவும், மண்சாலையை சரிசெய்தால்தான் பஸ்சை மீண்டும் இயக்கமுடியும் என தெரிவித்தனர்.

திருமங்கலம் மின்வாரியம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றிக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். மின்கம்பிகள் சரி–செய்த பின்புதான் மீண்டும் பஸ் போக்குவரத்து நடைெபறும் என்ற தகவல் கிராமமக்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News