உள்ளூர் செய்திகள்

போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கொள்ளையர்கள் சிக்கினர்

Published On 2022-12-12 08:22 GMT   |   Update On 2022-12-12 08:22 GMT
  • பெண்ணிடம் நகை பறித்த போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கொள்ளையர்கள் சிக்கினர்.
  • 2 மாதங்களுக்கு பிறகு மதுரைக்கு திரும்பிய தகவல் போலீசுக்கு கிடைத்தது.

மதுரை

மதுரை திருப்பாலை, பொன்விழா நகரை சேர்ந்தவர் அகி லாண்டேசுவரி (வயது 39). இவரது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சம்பவத்தன்று அகிலா ண்டேசுவரி ஓட்டலில் சாப்பாடு வாங்கிவிட்டு வீடு திரும்பி ெகாண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பின் தொடர்ந்து அகிலாண்டேசுவரி அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

இந்த வழக்கில் தொடர்பு டைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் குற்றவாளிகள் பற்றிய விவரம் தெரிய வந்தது. அவர்கள் மதுரையில் இருந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதும் தெரியவந்தது.

இந்த நிலையில் இருவரும் 2 மாதங்களுக்கு பிறகு மதுரைக்கு திரும்பிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வீட்டில் பதுங்கியிருந்த மூன்றுமாவடி மகாலட்சுமி நகர் உப்பிலி மாடசாமி என்ற மருது(25), வளர்நகர், அம்பலகாரன்பட்டி செல்வம் மகன் நவநீதன் (23) ஆகியோரை ேபாலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News