உள்ளூர் செய்திகள்

எங்கள் வீட்டில் சோதனை நடத்தியது அத்துமீறிய செயல்- 7 பேர் குடும்பத்தினர் பேட்டி

Published On 2022-09-22 09:37 GMT   |   Update On 2022-09-22 09:37 GMT
  • எங்கள் வீட்டில் சோதனை நடத்தியது அத்துமீறிய செயல் என 7 பேர் குடும்பத்தினர் பேட்டியளித்துள்ளனர்.
  • செல்போன்கள், லேப்-டாப்கள், சிடி, புத்தகங்கள், ரூ.3 லட்ச ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றதாக கூறினர்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை 7 வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இது இஸ்லாமியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சோதனை நடத்தப்பட்ட 7 பேர் குடும்பத்தினர் இன்று காலை கோரிப்பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

எங்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தினர். அதன் பிறகு 7 பேரையும் தரதரவென இழுத்துச் சென்றனர். அவர்கள் தற்போது எங்கு உள்ளனர்? என்ற விவரம் கூட எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

எங்கள் வீட்டில் இருந்து செல்போன்கள், லேப்-டாப்கள், சிடி, புத்தகங்கள், ரூ.3 லட்ச ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றனர்.

தேசிய புலனாய்வு முகமையின் அத்துமீறல் நடவடிக்கையை கண்டித்து மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை பகுதியில், இன்று மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News