அரசு ஆஸ்பத்திரி கட்டிடம் சீரமைக்கப்படும்
- உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரி கட்டிடம் சீரமைக்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியளித்தார்.
- ஆஸ்பத்திரி கட்டிடம், அமைச்சர், Hospital Building, Minister
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துமனையில் நேற்று இரவு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, 24 மணிநேர பிரசவ வார்டு, பெண்கள் வார்டு, எக்ஸ்-ரே, ரத்த வங்கி உள்ளிட்ட வார்டுகளை பார்வையிட்டார். நோயாளிகளிடம் சரியான சிகிச்சை வழங்கப்படுகிறதா? என விசாரித்தார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் தினசரி 1500- க்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாகவும், 200- க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் 260 குழந்தைகள் பிறந்துள்ளனர். கடந்த 6 மாதங்களாக குழந்தைகள் இறப்பு இல்லாமல் உள்ளது. 39 டாக்டர்கள் பணியிடங்களில் 4 பணியிடங்கள் காலியாக உள்ளது. ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. விரைவில் செயல்பட துவங்கும்.
கடந்த மாதம் ரூ. 1 கோடி செலவில் ஒருங்கிணைந்த ஆய்வக பணிகளும் நடந்து வருகிறது. மருத்துவமனை தேவைகள் என்னென்ன உள்ளது என்பதை கேட்ட றிந்து நிறைவேற்றப்படும். இந்த மருத்துமனையில் செயல்பட்டு வந்த பயாப்சி டெஸ்ட் வசதி சமீபகாலமாக இல்லாமல் உள்ளது என்ற கேள்விக்கு, அதற்கான வசதி உள்ள இடத்தில் செய்வதற்காக மதுரைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இங்கேயே செயல்பட ஏற்பாடு செய்யப்படும். மேலும் ஆஸ்பத்திரியில் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர். அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது நிலை மருத்துவர் மாதவன் அப்துல் பாரி சந்திரன், ராதாமணி மற்றும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் செவிலியர்கள் இருந்தனர்.