உள்ளூர் செய்திகள்
உசிலம்பட்டியில் முள்ளம்பன்றியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
- உசிலம்பட்டி பகுதியில் முள்ளம்பன்றியை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- பேரையூர் ரோட்டில் கடந்த சில நாட்களாக முள்ளம்பன்றி சுற்றித் திரிந்து வந்தது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பேரையூர் ரோட்டில் கடந்த சில நாட்களாக முள்ளம்பன்றி சுற்றித் திரிந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு குடியிருப்பு பகுதிகளுக்குள் முள்ளம்பன்றி புகுந்தது. இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
உடனே இதுகுறித் து உசிலம்பட்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் திருவள்ளுவர் நகரில் முள்ளம்பன்றியை பார்க்க கூட்டம் கூடியது. இதனால் முள்ளம்பன்றி அங்கிருந்து கால்வாய்க்குள் இறங்கி மாயமானது.
சிறிது நேரத்தில் அங்கு வந்த வனத்துறை அதிகாரி பென்சியோ தலைமை யிலான வன குழுவினர் முள்ளம்பன்றியை தேடி பார்த்தனர். ஆனால் பிடிபடவில்லை. இன்று காலையும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் இதுவரை சிக்கவில்லை.
முள்ளம்பன்றியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.