உள்ளூர் செய்திகள்

சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை

Published On 2023-05-20 12:42 IST   |   Update On 2023-05-20 12:42:00 IST
  • சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை தரிசனம் செய்தனர்.
  • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதந்தோறும் வரும் கார்த்திகையின் போது சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.

ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் வைகாசி மாதம் வரும் கார்த்திகையின் போது மட்டும் சிம்மா சனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். அதன்படி நேற்று வைகாசி மாத கார்த்திகையை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு சந்தனம், பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட 16 வகை சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் சுப்பிர மணிய சுவாமி தெய்வானை யுடன் எழுந்தருளி திருப்பரங்குன்றம் கீழ ரத வீதி, மேல ரத வீதி, பெரிய ரத வீதி, சன்னதி தெரு வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

Tags:    

Similar News