உள்ளூர் செய்திகள்

குருவித்துறை கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

திருமண பத்திரிகை வைத்து சிறப்பு பூஜை

Published On 2022-12-02 12:29 IST   |   Update On 2022-12-02 12:29:00 IST
  • குருவித்துறையில் திருமண பத்திரிகை வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
  • இதில் ஆர். பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

சோழவந்தான்

எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா பிறந்தநாள், அ.தி.மு.க. 51-வதுஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, அம்மா பேரவையின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் மகள் திருமணம் உட்பட 51 ஜோடிகளுக்கு திருமணம் வருகிற பிப்ரவரி 23-ந் தேதியன்று டி.குன்னத்தூரில் நடை பெறுகிறது.

இதனை முன்னாள் முதல்-அமைச்சர், எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார். இதற்கான திருமண அழைப்பிதழை மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், ஜெனகை நாராயண பெருமாள் கோவில், குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோவிலில் வைத்து சாமி கும்பிட்டு, திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களுக்கும், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் சட்ட மன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், பாலகிருஷ்ணன், பேரூர் கவுன்சிலர்கள், நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News