உள்ளூர் செய்திகள்
சிலம்பாட்டத்தில் உலக சாதனை படைத்த மதுரை வீரர்கள்
- மதுரை வீரர்கள் சிலம்பாட்டத்தில் உலக சாதனை படைத்தனர்.
- அறக்கட்டளை தலைவர் ராஜதுரை வேல்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை பரவை தனியார் கல்லூரியில் ஆசான் காட்டு ராஜா இலவச சிலம்ப பயிற்சி பள்ளி, ஜல்லிக்கட்டு பேரவை இலக்கிய அணி, பாரத சமூக பண்பாட்டுக் கழகம் இணைந்து நோபல் சாதனை சிலம்ப நிகழ்ச்சியை நடத்தியது. 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் குழு சிலம்பம், மரக்காலில் கண்ணை கட்டிக்கொண்டு 32 வகை சிலம்பம், ஆணிப்பலகை யில் ஒற்றை சிலம்பம், நீர்சிலம்பம், நெருப்பு வளையத்திற்குள் சிலம்பம் என்று 5 மணி நேரம் திறமைகளை வெளிபடுத்தினர்.
அவர்களுக்கு சான்றிதழ், கோப்பைகள் வழங்கப் பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மங்கையர்க்கரசி கல்வி குழும செயலாளர் அசோக்குமார், மதுரை இலக்கிய மன்ற துணைத் தலைவர் சம்பத், தமிழ் தேசிய சான்றோர்கள் அறக்கட்டளை தலைவர் ராஜதுரை வேல்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.