உள்ளூர் செய்திகள்

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மண்டல பயிலரங்கம்

Published On 2023-03-29 08:41 GMT   |   Update On 2023-03-29 08:49 GMT
  • குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மண்டல பயிலரங்கம் நாளை நடக்கிறது.
  • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

மதுரை

மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-ன் கீழ் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தினை செயல் படுத்துதல் தொடர்பாக ஒருநாள் பயிலரங்கம் நாளை 30-ந்தேதி மதுரை தங்கம் கிராண்ட் ஓட்டலில் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தலைமை வகிக்கிறார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயி லரங்கம் நடைபெறும். இந்தப் பயிலரங்கத்தில் மதுரை மற்றும் திருநெல் வேலி மண்டலத்தில் உள்ள அனைத்து தொழிலாளர் உதவி ஆணையர்கள் (அம லாக்கம்) மற்றும் மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள பிறதுறைகளான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம், ஊரக மேம்பாடு, காவல் துறை, சமூகநலத்துறை, கல்வித்துறை, வருவாய் துறை, சமூக பாதுகாப்பு துறை, என்.ஜி.ஓ.க்கள் மற்றும் இதர அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News