உள்ளூர் செய்திகள்

நாளை மின்தடை

Published On 2023-05-08 14:28 IST   |   Update On 2023-05-08 14:28:00 IST
  • நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
  • மேற்கண்ட தகவலை மதுரை அரசரடி மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரை அரசரடி துணைமின் நிலையம் பொன்னகரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (9-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏ.ஏ. மெயின்ரோடு, மேலபொன்னகரம் 2 முதல் 8-வது தெரு வரை, ஆர்.வி.நகர் 1 முதல் 4 தெருக்கள், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1-5 தெருக்கள், ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஆரப்பாளையம் அதை சுற்றியுள்ள பகுதிகள், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, கைலாசபுரம், அசோக் நகர், அருள்தாஸ்புரம், களத்து பொட்டல், பெரியசாமிகோனார் தெரு, தத்தனேரி மெயின் ரோடு முதல் தத்தனேரி மயானம் வரை, பாரதிநகர், கணேசபுரம், பாக்கியநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மேற்கண்ட தகவலை மதுரை அரசரடி மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News