உள்ளூர் செய்திகள்

மின்தடை

மின்தடை

Published On 2022-06-14 13:10 IST   |   Update On 2022-06-14 13:10:00 IST
  • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
  • மதுரை வடக்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மதுரை

அலங்காநல்லூர் துணை மின்நிலையத்தில் உள்ள என்.எஸ்.எம். பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (15-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சுக்காம்பட்டி, கேட்டுக்கடை, சின்னஊர்ச்சேரி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

வண்டியூர் துணை மின் நிலையத்தின் அய்யனார்புரம் பீடர் மற்றும் இலந்தைகுளம் ஐ.டி.பார்க் துணை மின் நிலையத்தின் எல்காட் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வண்டியூர் பி.கே.எம். நகர், சங்கு நகர், அழகிய சிங்கம் நகர், சமயன்கோவில், எல்காட் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (15-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருப்பாலை துணை மின் நிலையத்தின் சூர்யா நகர் பீடரில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (15-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சூர்யா நகர், மீனாட்சி அம்மன் நகர் 1 முதல் 11-வது தெருக்கள், சந்தோஷ் நகர், வி.கே.சாமி நகர், ராமசாமி தோப்பு, அருண் சிட்டி, சுபாஷினி நகர், சிறுதூர், அந்தனேரி, ஸ்குவார்டு காலனி, மருதங்குளம், மங்களக்குடி, அல்அமின் நகர், கடச்சனேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மதுரை வடக்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News