உள்ளூர் செய்திகள்

ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை ெசலுத்தப்பட்டது.

ஒ.பி.எஸ். அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை

Published On 2023-01-25 08:31 GMT   |   Update On 2023-01-25 08:31 GMT
  • மதுரை ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஒ.பி.எஸ். அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
  • தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மதுரை

இந்தி திணிப்புக்கு எதிராக 1960 ஆண்டு தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டம் அடைந்த நிலை யில் பேரறிஞர் அண்ணா தலைமையில் தமிழக முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் இந்தி எதிர்ப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர். இதில் பலர் உயிரிழந்தனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி இன்று மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி சார்பில் மாணவர் அணி மாநில இணைச்செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன் தலைமையில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலையில் தியாகி களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாணவராணி மாவட்ட செயலாளர் கமல், ஒன்றிய செய லாளர்கள் யோகராஜ், சன்மார்க்கம், ஜோதி முருகன், இளைஞராணி ராஜமாணிக்கம், பேரவை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், ஒன்றிய துணை செயலாளர் ராஜமாணிக்கம், மாணவராணி ரகு தேவன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News