உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

Published On 2022-12-16 07:57 GMT   |   Update On 2022-12-16 07:57 GMT
  • பொங்கல் பண்டிகையையொட்டி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வயலியுறுத்தப்பட்டது.
  • மேலூரில் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் பெரியாறு ஒரு போக பாசன சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூரில் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் பெரியாறு ஒரு போக பாசன சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்து ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழக அரசு கடந்த வருடம் போல் இந்த வருடமும் கரும்பை கொள்முதல் செய்ய விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும். அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடைசெய்யப்பட்ட சில பூச்சி கொல்லி மருந்துகளின் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விளைந்து வரும் நெற்பயிரை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணப்பட்டுவாடா விவசாயி களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலூர் பெரியாறு ஒரு போக விவசாயிகள் சங்க செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள், கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News