உள்ளூர் செய்திகள்

பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி. 

அனுமதியின்றி பேரணி சென்ற அரசு ஊழியர்கள் கைது

Published On 2022-11-16 13:47 IST   |   Update On 2022-11-16 13:47:00 IST
  • மதுரையில் அனுமதியின்றி பேரணி சென்ற அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • தமிழக அரசு ஊழியர்களுக்கு உரிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.

மதுரை

தமிழக அரசு ஊழியர்களுக்கு உரிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நேற்று முதல் நாளை (17-ந் தேதி) வரை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலகத்தில் நேற்று பேரணி நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 2-வது நாளான இன்று திருப்பரங்குன்றம் உதவி கல்வி அலுவலகத்தில் பேரணி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக 30-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டிருந்தனர். அங்கு வந்த போலீசார் பேரணிக்கு அனுமதி இல்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து பேரணியாக செல்ல முயன்றனர்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன், ஆசிரியர் சரவணன், டான்சாக் மனோகரன், மாரியப்பன், முருகன், ஆறுமுகம், மாரி, முனியசாமி உள்பட 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

Tags:    

Similar News