உள்ளூர் செய்திகள்

குப்பை கழிவு மறுசுழற்சி பயன்பாட்டு மையம்

Published On 2023-05-22 08:33 GMT   |   Update On 2023-05-22 08:33 GMT
  • குப்பை கழிவு மறுசுழற்சி பயன்பாட்டு மையம் தொடங்கி வைக்கப்பட்டது.
  • செயல் அலுவலர் சகாய அந்தோணியூஜின் பேசினார். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பை கழிவுகளுக்கான மறுசுழற்சி பயன்பாட்டு மையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எதிர்புறம் உள்ள நாடக மேடையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை பேரூராட்சி தலைவர்ஜெயராமன் தொடங்கி வைத்தார். மேலும் அவர், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தேவையற்ற பொருட்களை தேவைப்படுவோர்களுக்கு வழங்கினார்.

சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த மையத்தை தொடர்ந்து பயன்படுத்தி தேவையற்ற பொருட்களை இங்கே ஒப்படைத்து தேவைப்படுவோர்களுக்கு வழங்குவதன் மூலம் பெரும்பாலான கழிவுகளை மறுசுழற்சி செய்வதால் சுற்றுச்சூழல் மாசு குறையும். பொதுமக்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கழிவுகளை தரம் பிரித்து வழங்கியும், பயன்படாத பொருட்களை இந்த மையத்தில் கொடுத்தும் தூய்மையான நகரமாக பேரூராட்சியை மாற்ற உதவ வேண்டும் என்று செயல் அலுவலர் சகாய அந்தோணியூஜின் பேசினார். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News