மணமக்கள் எஸ்.கார்த்திக்பாண்டியன்-ஜி.சுபாஷினி
தி.மு.க. மாவட்ட பொருளாளர் இல்ல திருமண விழா
- தி.மு.க. மாவட்ட பொருளாளர் இல்ல திருமண விழா நடக்கிறது.
- இன்று (26-ந்தேதி) மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
மதுரை
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர், கார்த்திக் ஹவுஸிங் பிரை வேட் லிமிடெட் நிறுவன மேலாண்மை இயக்குனர் சோமசுந்தரபாண்டியன்- எஸ்.அன்புசெல்வி தம்பதிய ரின் மகனும், பொறியாளரு மான எஸ்.கார்த்திக் பாண்டியனுக்கும், ஸ்ரீராம் டிசைனர் அண்ட் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் ஏ.கணேசன்-பத்மா தம்ப தியரின் மகளும், மருத்துவரு மான ஜி.சுபாஷினிக்கும் நாளை (27-ந் தேதி) காலை 9 மணிக்கு மேல 10.30 மணிக்குள் மதுரை பாண்டி கோவில் ரிங் ரோட்டில் அமைந்துள்ள துவாரகா பேலஸ் திருமண மண்டபத் தில் திருமணம் நடக்கிறது.
இந்த திருமணத்தை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சரு மான பி.மூர்த்தி தலைமை யேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்து கிறார்.
திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், மாநகர் மாவட்ட செயலா ளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன், எம்.எல்.ஏ.க் கள் பூமிநாதன், ஆ.வெங்க டேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்த விழாவில் தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகி கள், தொழிலதிபர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
முன்னதாக இன்று (26-ந்தேதி) மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.