உள்ளூர் செய்திகள்

வனவிலங்குகளால் சேதப்படுத்திய பயிர்களை ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வன விலங்குகளால் மக்காசோள பயிர்கள் சேதம்

Published On 2022-10-05 09:50 GMT   |   Update On 2022-10-05 09:50 GMT
  • வன விலங்குகளால் மக்காசோள பயிர்கள் சேதமடைந்ததற்காக நிவாரணம் வழங்குமாறு ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் அதிக அளவில் இந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மதுரை

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட மக்காச் சோள பயிர்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

பேரையூர், கல்லுப்பட்டி பகுதியில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் அதிக அளவில் இந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

இதுகுறித்து தமிழக அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக் கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு ஆயிரக்க ணக்கான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.

அதேபோன்று தற்போது வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு போர்க்கால அடிப்படையில் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News