உள்ளூர் செய்திகள்

முகாமில் காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமாருக்கு அன்னை பாத்திமா கல்லூரி தாளாளர் எம்.எஸ். ஷா நினைவு பரிசு வழங்கினார்.

அன்னை பாத்திமா கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

Published On 2023-11-16 10:42 IST   |   Update On 2023-11-16 10:42:00 IST
  • அன்னை பாத்திமா கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
  • பிரதமர் மோடி மாணவர்கள் நலனி லும், தேசத்தின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றுகிறார்.

மதுரை

ஆண்டுதோறும் ஜனவரி 12-ந் தேதி விவேகானந்தர் பிறந்த நாள் விழா இளைஞர் பெருவிழா என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி திறமையான நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகளை தேர்ந்தெடுப்பதற்கு பல்கலைக்கழகம் வாரியாக முகாம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்தில் இணைந்துள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கல்லூரிக ளின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகளின் முகாம் திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்து உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தொடங்கி வைத்தார். அன்னை பாத்திமா கல்லூரி யின் தாளாளர் எம்.எஸ். ஷா புதிய தேசிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. பிரதமர் மோடி மாணவர்கள் நலனி லும், தேசத்தின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றுகிறார். மாணவ- மாணவிகள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களுடைய எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார்.

மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் செந்தில் குமார், மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாண்டி ஆகியோர் பேசினர். கல்லூரியின் முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் வாழ்த்துரை வழங்கினார்.

இதில் மாணவ-மாணவி களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவர்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெறும் இளைஞர் பெருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முனி யாண்டி, ராமுத்தாய், ஜோதி, உடற்கல்வி இயக்குனர் நாராயண பிரபு மற்றும் சிஸ்டம் என்ஜினீயர் உதய கதிரவன், மனிதவள மேனேஜர் முகமது பாசில் ஆகியோர் செய்தனர். இறுதியில் செந்தமிழ் கல்லூரி பேராசிரியர் பூங்கோதை நன்றி கூறினார்.

Tags:    

Similar News