பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க மானியம்
- அலங்காநல்லூரில் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுகிறது.
- இந்த தகவலை வேளாண்மை துறை தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பட்டதாரி இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு 25 சதவீதம் மானியமாக அதிகபட்சம் ரூ. ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
பயனாளிகள் இளங்கலை வேளாண்மை, தோட்டக்கலை அல்லது வேளாண் பொறியியல் படிப்பு படித்தவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் 21 வயது முதல் 48 வயது வரை உள்ளவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். பயனாளிகள் தனது சொந்த மூலதனத்தில் வேளான் சார்ந்த தொழில் செய்ய வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்கள் போன்ற உள்கட்டமைப்புக்கான செலவுகள் திட்ட மதிப்பீட்டில் சேர்க்கக் கூடாது.
கலைஞர் திட்ட கிராமங்களான பண்ணைகுடி, அச்சம்பட்டி, மணியஞ்சி, பெரியஇலந்தைகுளம், வடுகபட்டி, தெத்தூர், எரம்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி வலையபட்டி, அய்யூர், முடுவார்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேற்கண்ட தகவலை வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி தெரிவித்துள்ளார்.