உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. மண்டல கூட்டம்

Published On 2023-05-29 14:09 IST   |   Update On 2023-05-29 14:09:00 IST
  • பா.ஜ.க. மண்டல கூட்டம் நடந்தது.
  • அவனிஆனந்த், சேஷன், தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரை அவனியாபுரத்தில் பா.ஜ.க. மண்டல கூட்டம் மண்டல் தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர் ஓம் சக்தி ஸ்ரீ முருகன் கலந்து கொண்டு பேசினார். தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக புதிதாக திறக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது, மேலும் இந்த செங்கோலை மதுரை ஆதீனம் கையால் பெற்றதற்கு இந்த மதுரை மண் பெருமை படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருகிவிட்டது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இதனை சரிசெய்யவும் , கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பிரசார அணி சடாசரம், அவனிஆனந்த், சேஷன், தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News