உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றவர்கள்.

விழிப்புணர்வு பேரணி

Published On 2022-09-24 15:30 IST   |   Update On 2022-09-24 15:30:00 IST
  • உலக இருதய தினத்தையொட்டி மதுரையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • டாக்டர்கள் கணேசன், சிவக்குமார், செல்வமணி, ஜெயபாண்டியன், சம்பத்குமார், குமார், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை

உலக இருதய தினம் வருகிற 29-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரையில் இன்று விழிப்புணர்வு பேரணி மூன்று மாவடியில் இன்று காலை நடந்தது. இதில் டாக்டர்கள், நர்சுகள், செவிலியர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணியில் பங்கேற்ற வர்கள் ஆரோக்கிய உணவு முறை, நடைப்பயிற்சி, உடற்பயிற்சியை ஊக்குவிப்பதை வலியுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். மூன்று மாவடியில் தொடங்கிய பேரணி 120 அடி ரோடு வழியாக மேலூர் மெயின் ரோட்டை அடைந்தது.

முன்னதாக மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் கண்ணன் பேசுகையில், ரத்த தமனியில் சேரும் கொழுப்பு காரணமாக ரத்த ஓட்டம் குறைந்து மாரடைப்பு ஏற்படுகிறது. உலக அளவில் ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் இறக்கின்ற னர்.

உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாத சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கம் ஆகியவையே இருதயநோய் அதிகரிப்புக்கு காரணம் ஆகும்.

மாரடைப்பு வராமல் தடுப்பது மற்றும் உரிய நேரத்திற்குள் சிகிச்சை பெறுவது ஆகியவை மிகவும் முக்கியமாகும் என்றார்.

இதில் டாக்டர்கள் கணேசன், சிவக்குமார், செல்வமணி, ஜெயபாண்டியன், சம்பத்குமார், குமார், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News