உள்ளூர் செய்திகள்
- அலங்காநல்லூரில் அரிமா சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
- புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நடந்தது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை, தனியார் பள்ளி வளாகத்தில் அரிமா சங்க ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நடைபெற்றது.
முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் தங்கராஜ், நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார தலைவர் ஜெயராமன், சங்க முன்னாள் தலைவர் நடராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் செயலாளர் ரகுபதி வரவேற்றார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முன்னதாக அரிமா சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
பின்னர் சங்கத்தின் புதிய தலைவராக மனோகரவேல் பாண்டியன், செயலாளராக கண்ணன், பொருளாளராக சோமசுந்தரம் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.