உள்ளூர் செய்திகள்

புதிதாக நியமனம் செய்யப்பட்ட பணியாளருக்கு மத்திய மந்திரி பணி ஆணையை வழங்கிய போது எடுத்த படம்.

மதுரை மண்டலத்தில் 200 பேருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி

Published On 2023-05-16 13:57 IST   |   Update On 2023-05-16 13:57:00 IST
  • மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாமில் மத்திய மந்திரி பங்கேற்றார்.
  • ரெயில்வே உதவி மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை

மத்திய அரசின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 45 இடங்களில் இன்று சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அரசுத்துறை மற்றும் அமைப்புகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகள் வழங்கப் பட்டன.

மதுரையில் இது தொடர்பான தொழில் வர்த்தக சங்கத்தில் இது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் இணை மந்திரி ஸ்ரீபாத் யசோ நாயக் கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். மதுரை தபால் துறை தலைமை அதிகாரி வி.எஸ்.ஜெயசங்கர், மதுரை மண்டல ரெயில்வே உதவி மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தபால் துறை மற்றும் ரெயில்வே துறை சார்பில் 200 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.இவர்களுக்கு ஆன்லைன் மூலம் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் துறை ஊழியர், ரெயில்வே பயணச்சீட்டு எழுத்தர், இளநிலை எழுத்தர் மற்றுத் தட்டச்சர், தண்டவள பராமரி ப்பாளர், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிக ளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News