உள்ளூர் செய்திகள்

மதுரையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 100 ரவுடிகள் கைது

Published On 2022-12-18 09:12 GMT   |   Update On 2022-12-18 09:12 GMT
  • மதுரையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 100 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
  • போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் பாது காப்பு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

மதுரை

ஆங்கில புத்தாண்டுக்கு 13 நாட்களே உள்ளன. இதையொட்டி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் பாது காப்பு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பழைய குற்றவாளிகள் மீண்டும் குற்ற சம்பவங்க ளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

மதுரை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறியில் தொடர்புடைய சுமார் 1000 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்கள் ஜாமீனில் விடு தலை செய்யப்பட்டுள்ள னர். அவர்கள் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடு கின்றனரா? என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் குற்ற சம்பவங்க ளில் மீண்டும் ஈடுபட தயா ராகி வரும் ரவுடிகளில் பலரை கைது செய்ய போலீசார் முடிவு செய்த னர்.

இதற்கான பணி கடந்த ஒரு மாதமாக தொடங்கி நடந்து வருகிறது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, கருப்பாயூரணி, வாடிப்பட்டி, திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, மாநகரில் தல்லாகுளம், செல்லூர், தெப்பக்குளம் உள்பட பல்வேறு போலீஸ் நிலை யங்களில் இருந்து சுமார் 100 ரவுடிகள் இதுவரை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர தப்பி ஓடிய மேலும் பலரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News