பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டபோது எடுத்த படம்.
திருப்பரங்குன்றம் வந்த காவடி பக்தர்களுக்கு மேலூரில் வரவேற்பு
- திருப்பரங்குன்றம் வந்த காவடி பக்தர்களுக்கு மேலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- திருப்பரங்குன்றம் கோவிலுக்கு காவடி எடுத்து கொண்டு பக்தர்கள் புறப்பட்டு சென்றது.
மேலூர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அழகாபுரி, கண்டனூர் ஆகிய பகுதியிலிருந்து ஒவ் வொரு ஆண்டும் திருப்பரங் குன்றம் முருகனுக்கு காவடி எடுத்து ஏராளமான பக்தர் கள் சென்று வருகின்றனர்.
அதேபோல் இந்த ஆண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டு பாதயாத்தி ரையாக நேர்த்திக் கடன் செலுத்த காவடி எடுத்துக் கொண்டு பாதயாத் திரையாக வந்த பக்தர்கள் மேலூருக்கு வந்தனர். அவர்களுக்கு மேலூர் பகுதி முருக பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் காவடி எடுத்து வந்தவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த னர்.
பின்னர் மேலூரில் உள்ள ஒரு திருமண மண்ட பத்தில் காவடிகள் வைத்து அங்கு முருகனுக்கு சந்தனம், திருநீறு, பால், பழ அபிஷே கம் மற்றும் தீபஆராதனை நடைபெற்றது. காவடி எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு காவடி எடுத்து கொண்டு பக்தர்கள் புறப்பட்டு சென்றது.