காதல் தம்பதி தற்கொலை முயற்சி - நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை
- பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இவர்கள் திருப்பூரில் தங்கி இருந்து, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
- நேற்று முன்தினம் நாமக்கல்லில் உள்ள லாட்ஜில் ஒன்றில் தங்கிய அவர்கள், நேற்று காலை தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கி நிலையில் கிடந்தனர்.
நாமக்கல்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 34). இவரது மனைவி கவுசல்யா. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இவர்கள் திருப்பூரில் தங்கி இருந்து, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல்லில் உள்ள லாட்ஜில் ஒன்றில் தங்கிய அவர்கள், நேற்று காலை தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கி நிலையில் கிடந்தனர். தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீசார் அவர்களை மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், விரைவில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து நாமக்கல் நகர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.