உள்ளூர் செய்திகள்

நாமக்கல் அருகே லாரி திருட்டு- உரிமையாளருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Published On 2023-05-11 12:49 IST   |   Update On 2023-05-11 12:49:00 IST
  • டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருபவர் சந்திரசேகரன் (வயது 55). இவருக்கு சொந்தமான லாரியை கடந்த 2019-ம் ஆண்டு அதன் டிரைவர் ஓட்டிச் சென்று, சங்ககிரி அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
  • பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, லாரியை காணவில்லை.

நாமக்கல்:

நாமக்கல், சேலம் ரோட்டில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருபவர் சந்திரசேகரன் (வயது 55). இவருக்கு சொந்தமான லாரியை கடந்த 2019-ம் ஆண்டு அதன் டிரைவர் ஓட்டிச் சென்று, சங்ககிரி அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, லாரியை காணவில்லை. இது குறித்து சங்ககிரி போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். மேலும், லாரிக்கு இன்சூ ரன்ஸ் செய்யப்பட்டிருந்த, சேலத்தில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனிக்கு சந்திரசேகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் லாரியை கண்டுபிடிக்க இயலவில்லை என்று கோர்ட்டில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தனர். இதையொட்டி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசிபடி, காணாமல் போன லாரிக்கான இன்சூ ரன்ஸ் தொகை ரூபாய் ரூ.15 லட்சத்தை தருமாறு சந்திர சேகரன் கேட்டு வந்துள்ளார்.

ஆனால் 19 மாதங்கள் கழித்து கடந்த 2021 ஜனவரி மாதத்தில் லாரி டிரைவரின் நம்பிக்கை துரோகத்தால் லாரி காணாமல் போனதாகவும், அதனால் இழப்பீட்டுத் தொகை வழங்க முடியாது என்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் லாரி உரிமையாளர் சந்திர சேகர், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2021-ம் ஆண்டில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நேற்று மாவட்ட நுகர்வோர் கோர்ட் உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் ராமராஜ் தீர்ப்பு வழங்கினார். அதில், லாரி உரிமையாளருக்கு பாலிசிபடி முழு இன்சூரன்ஸ் தொகை ரூ.15 லட்சத்தை லாரி காணாமல் போன 2019 ஜூன் மாதம் முதல் வட்டியுடன் சேர்த்து 4 வார காலத்திற்குள் வழங்க வேண்டும்.

இன்சூரன்ஸ் நிறுவ னத்தின் சேவை குறை பாட்டால் லாரி உரிமையா ளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்க ளுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News