உள்ளூர் செய்திகள்

ஐகோர்ட் நீதிபதி சேஷசாயி, மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சீனிவாசன் ஆகியோர் காசோலை வழங்கிய காட்சி.

நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் லோக் அதாலத்: விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு ரூ.45.90 லட்சம் இழப்பீடு- ஐகோர்ட் நீதிபதி சேஷசாயி வழங்கினார்

Published On 2023-06-10 09:04 GMT   |   Update On 2023-06-10 09:04 GMT
  • மக்கள் நீதிமன்றம் இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் நடை பெற்றது.
  • 4 விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு காசோலைகள் வழங்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இன்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

அதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டில் நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம் இன்று நெல்லை மற்றும் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் நடை பெற்றது. இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 315 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை ஐகோர்ட் நீதிபதி சேஷசாயி தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரு மான சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

இதில் அரசு மருத்துவர் தினேஷ், வங்கி அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விசாரணையின் போது 4 விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு காசோலைகள் வழங்கப்பட்டது. 4 விபத்துகளிலும் இறந்தவர்களின் குடும்பத்தி னருக்கு மொத்தமாக ரூ. 45 லட்சத்து 90 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் காமராஜ், மூத்த வக்கீல்கள் திருமலையப்பன், மரிய குழந்தை, ராமேஸ்வரன், முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன் செய்திருந்தார்.

Tags:    

Similar News