உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் நடந்த லோக் அதாலத்தில் 589 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2022-06-28 06:57 GMT   |   Update On 2022-06-28 06:57 GMT
  • ஜீவனாம்ச வழக்கு, செக் மோசடி, சிவில் வழக்கு, வங்கி வராக்கடன் உள்ளிட்ட 1,281 வழக்கு விசாரணை நடைபெற்றது.
  • 589 வழக்குகள் உடனடி தீர்வு காணப்பட்டு ரூ.45 கோடியே 27 லட்சத்து 3 ஆயிரத்து 83 நிவாரண தொகையாக வழங்கப்பட்டது.

பொன்னேரி:

பொன்னேரியில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் கூடுதல் சார்பு நீதிமன்றம் முதன்மை நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்கள் 1, 2 இயங்கி வருகின்றன.

இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் முதன்மை சார்பு நீதிபதி அறிவுறுத்தலின் படி மெகா லோக் அதாலத் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் நிலமோசடி, குடும்ப நல வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்குகள், ஜீவனாம்ச வழக்கு, செக் மோசடி, சிவில் வழக்கு, வங்கி வராக்கடன், உள்ளிட்ட 1,281 வழக்கு விசாரணை நடைபெற்றது. 589 வழக்குகள் உடனடி தீர்வு காணப்பட்டு ரூ.45 கோடியே 27 லட்சத்து 3 ஆயிரத்து 83 நிவாரண தொகையாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News