உள்ளூர் செய்திகள்

லோக் அதாலத்தில் 56 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.3.72 கோடிக்கு தீர்வு

Published On 2023-07-09 15:40 IST   |   Update On 2023-07-09 15:40:00 IST
  • கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடந்தது.
  • கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் 404 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கிருஷ்ணகிரி, 

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்த ரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) வசந்தி தலைமை தாங்கினார்.

இதில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, வாரிசு உரிமை, வங்கி வழக்குகள் மற்றும் சிறு குற்ற வழக்குகள், குடும்ப வழக்குகள் உள்ளிட்டவை விசாரிக்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது.

இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுதா, சிறப்பு சார்பு நீதிபதி அஷ்வாஹ் அமகது, மாவட்ட சட்ட ஆணைக்குழு செயலாளர் ஜெனிபர் மற்றும் வழக்கறிஞர்கள், மனுதாரர்கள், எதிர்மனு தாரர்கள் பங்கேற்றனர்.

அதன்படி, கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் 404 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் 56 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 71 லட்சத்து 91 ஆயிரத்து 629க்கு தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News