உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு கடனுதவியை கலெக்டர் பூங்கொடி வழங்கினார்.

திண்டுக்கல்லில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு கடனுதவி

Published On 2023-10-15 07:21 GMT   |   Update On 2023-10-15 07:21 GMT
  • வாழ்ந்து காட்டுவோம் திட்டம், இணை மானிய நிதித் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 2 பயனாளிகளுக்கு ரூ.14.50 லட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
  • தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்வதுடன், குறைந்தது 10 நபர்களுக்காவது வேலைவாய்ப்பு அளித்து, அவர்களையும் ஊக்கப்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், இணை மானிய நிதித் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 2 பயனாளிகளுக்கு ரூ.14.50 லட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிகளை கலெக்டர் பூங்கொடி வழங்கி பேசியதாவது,

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவதற்காகவும், தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி மற்றும் தொழில் தொடங்க மானிய கடனுதவிகள் வங்கிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், இணை மானிய நிதித் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க கடனுதவி கேட்டு விண்ணப்பித்த 2 பேருக்கு ரூ.14.50 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடனுதவிகள் பெற்று தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்கள் நல்ல முறையில் தொழில் செய்து, தொழிலை மேம்படுத்தி, தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக ்கொள்வதுடன், குறைந்தது 10 நபர்களுக்காவது வேலைவாய்ப்பு அளித்து, அவர்களையும் ஊக்கப்படுத்திட வேண்டும், என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கமலக்கண்ணன், முன்னோடி வங்கி மேலாளர்அருணாச்சலம், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மாவட்ட செயல் அலுவலர்சுதாதேவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News