உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி மாவட்டத்தில் உற்பத்தி, சேவை தொழில் தொடங்க கடன் உதவி

Published On 2023-07-09 09:48 IST   |   Update On 2023-07-09 09:48:00 IST
  • 2ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ., தொழிற்கல்வி ஆகிய கல்வித் தகுதி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
  • தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் கடனை திருப்பி செலுத்தும் மொத்த காலத்திற்கும் வழங்கப்படும்.

தேனி:

தமிழக அரசால் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் 2012-ம் ஆண்டிலிருந்து முதல் தலைமுறை தொழில் முனைவோருக்காக மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ., தொழிற்கல்வி ஆகிய கல்வித் தகுதி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

பொதுப் பிரிவினர் 21 முதல் 45 வயது வரையிலும் மற்றும் சிறப்பு பிரிவினருக்கு பெண்கள், மாற்று பாலினத்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 21 முதல் 55 வயது வரையிலும் விண்ணப்பிக்க வயது வரம்பு உள்ளது. விண்ணப்பதாரர்கள் 3 வருடத்திற்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

மேலும் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த பொருளாதார ரீதியாக சாத்தியப்படக்கூடிய தொழில்கள் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கிக் கடனுதவி வழங்க பரிந்துரை செய்யப்படும். கடனுதவி பெற்று தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 லட்சம் மானியம் வழங்கப்படும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் கடனை திருப்பி செலுத்தும் மொத்த காலத்திற்கும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள தொழில் முனைவோர்கள் இணைய முகவரியில் விண்ணப்பித்து தொழிற்கடன் பெற்று பயன் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News