லைவ் அப்டேட்ஸ்- அடுத்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு
அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இரு தரப்பு உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கம்.
தொண்டர்களின் உணர்வுக்கேற்ப பொதுக்குழு நடைபெறுகிறது. தொண்டர்களின் உணர்வு, குரலை யாராலும் தடுக்க முடியாது- முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல், வானகரம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
வானகரம் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாற்று பாதையில் பயணம் மேற்கொண்டனர். இதனால் பொதுக்குழு கூட்டம் சற்று தாமதமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க வந்த உறுப்பினர்கள் கையெழுத்திடும் நடைமுறையை பின்பற்றவில்லை என தகவல்.
கையெழுத்திடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும் உறுப்பினர்கள் பின்பற்றவில்லை.